Tuesday, 28 January 2014

கார் மீது பஸ் மோதல்: நடிகை குஷ்பு உயிர் தப்பினார்....



குஷ்பு புதிதாக 'ஆடி கியு5' ரக கார் வாங்கியுள்ளார். இந்த காரில் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

போக்குவரத்து சிக்னல், அருகில் சென்றபோது சிவப்பு விளக்கு எரிந்தது. உடனே காரை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மாநகர பஸ் குஷ்புவின் கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் நொறுங்கி சேதமானது. பம்பர் மற்றும் விளக்குகளும் உடைந்தது. இதில் குஷ்புக்கு காயம் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசில் அவர் புகார் அளிக்கவில்லை.

இது குறித்து குஷ்பு கூறியதாவது:–

விபத்தில் எனக்கு காயம் ஏற்படவில்லை. நன்றாக இருக்கிறேன். ஆனாலும் இந்த விபத்து எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ் டிரைவர் வேகமாக பஸ்சை ஓட்டி வந்து என் கார் மீது மோதினார். போக்குவரத்து விதியை அவர்கள் கடைபிடிப்பது இல்லை. வாகனங்களை நிறுத்துவதற்காக போடப்பட்ட கோடுகளையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. பஸ் மோதியதில் என் காரை ஓட்ட முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது.

விபத்து குறித்து புகார் செய்தால் அவர்களுக்கு யூனியன் பாதுகாப்புக்கு வரும் டிரைவரின் குடும்ப சூழல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புகார் செய்யாமல் விட்டுவிட்டேன்.

எனக்கு இந்த காரை எனது கணவர் சுந்தர்.சி. பரிசாக தந்தார். நல்ல வேளை, விபத்தில் உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. எனக்கு இது மோசமான நாளாக அமைந்தது.

இவ்வாறு குஷ்பு கூறி னார்.
Share:

No comments:

Post a Comment

© FAST DIET LIFE All rights reserved | Theme Designed by Seo Blogger Templates Published.. Blogger Templates