Tuesday, 28 January 2014

ஒரே தினத்தில் பிறந்தநாளைக் கொண்டாடும் அபூர்வ சகோதரர்கள்…. நம்பமுடியாத ஆச்சரியம்..!



பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் காணப்பட்டால் அவர்களில் பிறந்தநானை நினைவில் வைப்பது என்பது சற்று கடினமே.

ஆனால் பிரித்தானியாவில் கும்பிறியாவில் கிளியேட்டர் மூர் எனும் இடத்தைச் சேர்ந்த பீற்றர் டன் (24) எமிலி சக்றுஹாம்(22) என்ற தம்பதிகளுக்கு அக்கவலையே இல்லை. ஏனென்றால் இவர்களுக்கு பிறந்த 4 குழந்தைகளுமே ஒரு திகதியில் தனது பிறந்த நாளைக் கொண்டுகின்றனர்.

இத்தம்பதிகளின் மூத்த மகனான சாம்(5), மற்றும் இரண்டாவதாக பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான புரூக்(2) மற்றும் நிகோலி ஆகியோர் ஜனவரி மாதம் 12ஆம் திகதியே தமது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

இவர்களின் நான்காவது மகனான ரேயன் கடந்த 12ஆம் திகதி பிறந்துள்ளான். இவ்வாறு ஒரு தாய்க்கு பிறந்த 4 பிள்ளைகளும் ஒரே நாளில் பிறந்த நாளைக் கொண்டாடுவது 133225 பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

இந்தத் தம்பதிகளுள் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஒரே தினத்தில் பிறக்க வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

© FAST DIET LIFE All rights reserved | Theme Designed by Seo Blogger Templates Published.. Blogger Templates