Tuesday, 28 January 2014

பால்கி படத்தில் ‘மௌன’ நாயகனாக நடிக்கும் தனுஷ்..!



 ராஞ்ச்னாவின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட காத்திருப்புக்குப் பின் தனது அடுத்த ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

 பால்கி இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடி கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசன். மேலும், இப்படத்தில் தனுஷுடன் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பும் நடிக்கிறார்.

காதல் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக தரும் பால்கியின் இப்படமும் காதலை அடிப்படையாகக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் தனுஷ் வாய்ப் பேச இயலாத இளைஞனாக நடிக்கிறாராம்.

அம்பிகாபதி....

தமிழ் நடிகர் தனுஷின் முதல் ஹிந்திப் படம் ராஞ்ச்னா. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.

கொலைவெறி புகழ்...

ஏற்கனவே கொலைவெறி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தனுஷ், தனது ராஞ்ச்னா படத்தின் வெற்றி மூலம் திறமையான நடிகர் என்னும் பெயரை அங்குப் பெற்றார்.

ராஞ்ச்னா மாதிரியே....

 இந்நிலையில் தனது பெருமையை தக்க வைத்துக் கொள்ள விரும்பிய தனுஷ், ராஞ்ச்னா போன்ற காதல் கதை அமைவதற்காகக் காத்திருந்தார். அதுவரை வேறு படங்கள் எதையும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பால்கி....

அதனைத் தொடர்ந்து, தற்போது சீனிகம், ஃபா போன்ற வெற்றிப் படஙகளைத் தந்த இயக்குநர் பால்கியின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பி சி ஸ்ரீ ராம்.

நடிகனாக விரும்பும் தனுஷ்....
 இப்படத்தில் வாய் பேச முடியாத இளைஞராக தனுஷ் நடிப்பதாகவும், மிகச் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு காணும் தனுஷிற்கு நடிகர் அமிதாப் உதவுவதாகவும் கதையோட்டம் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share:

No comments:

Post a Comment

© FAST DIET LIFE All rights reserved | Theme Designed by Seo Blogger Templates Published.. Blogger Templates