Monday, 27 January 2014

பாக்யராஜ் படத்துக்கு 4 நாட்டிலிருந்து வில்லன்கள்...!



டைரக்டர் கே.பாக்யராஜ் நடிக்கும் படத்திற்காக 4 நாடுகளை சேர்ந்த வில்லன்கள் நடிக்கின்றனர். கதாபாத்திரங்களின் பெயரை டைட்டிலாக வைப்பது பல காலமாக நடக்கிறது.

அந்த வரிசையில் மாணவர்கள் 3 பேர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு அவர்கள் படங்களில் ஏற்கும் கவுதம் கனி கிரேஸ் என்று பெயரே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 புத்திசாலித்தனமான 3 மாணவர்களின் கதையாக இது உருவாகி இருக்கிறது. விஞ்ஞானி வேடத்தில் கே.பாக்யராஜ் நடிக்கிறார். இதில் வில்லன்களாக நடிப்பதற்கு நான்கு நாடுகளிலிருந்து 4 பேர் அழைத்து வரப்பட்டனர்.

பாகிஸ்தானை சேர்ந்த யாசின், சிங்கப்பூரை சேர்ந்த  ஆனந்தராஜ், நைஜீரியாவை சேர்ந்த கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாய் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் மலேசிய நடிகர்கள் டான் சசி, அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர், மித்ரன், சுகுதபலனட, கிருபாஸ்ரீ உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 இதன் ஒளிப்பதிவை மகேஷ் கே.தேவ் செய்ய, ஆதிஷ் இசை அமைக்கிறார். சிவா.ஜி தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் பாடல், டிரைலர் வெளியிடப்பட்டது. இதன் ஷூட்டிங் மலேசியாவில் நடந்துள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் இக்கதையில் இடம்பெறுவதால் அதிக செலவில் விஞ்ஞான ஆய்வுகூட செட் போடப்பட்டு அதில் ஷூட்டிங் நடந்தது..
Share:

No comments:

Post a Comment

© FAST DIET LIFE All rights reserved | Theme Designed by Seo Blogger Templates Published.. Blogger Templates